விளக்கம்
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஸஹாபாக்களிடம் வருகை தந்தார் என உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அவரின் ஆடை கடுமையான வெண்மையும், தலை முடி கடுமையான கரு நிறமும் கொண்டதாக இருந்தது. அத்துடன் பயணம்செய்தவரிடம் காணப்படும் களைப்பு, தூசுபடிதல், முடிபரந்திருத்தல், ஆடை அழுக்காக இருத்தல் போன்ற அடையாளங்கள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. நபியவர்களிடம் சமூகம் தந்து அமர்ந்திருந்தோர் யாரும் அவரை தெரிந்திருக்கவுமில்லை. வந்தவர் நேரே நபியவர்களிடம் சென்று மாணவன் ஒருவன் அமரும் முறையில் நபியவர்களிடம் அமர்ந்து இஸ்லாம் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் ஏற்று சாட்சி கூறுதல், ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழுதல், ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குதல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சக்தியுள்ளோர் ஹஜ்ஜை நிறைவேற்றல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே இஸ்லாம் எனப் பதிலளித்தார்கள்.
உடனே கேள்வி கேட்டவர் நீங்கள் உண்மை சொன்னீர்கள் எனக் கூறினார். தனக்குத் தெரியாததைக் குறித்து கேட்டுவிட்டு பின்னர் அதனை உண்மைப்படுத்துவது ஸஹாபாக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து ஈமான் குறித்து வினவினார். அதற்கு நபியர்கள் ஈமான் உள்ளடக்கியிருக்கும் ஆறு அம்சங்களையும் குறிப்பிட்டார்கள். முதாலாவது : அல்லாஹ்வின் இருப்பையும் அவனின் பண்புகளையும் விசுவாசித்தல், படைத்தல் போன்ற விடயத்தில் அவனை ஒருப்படுத்துதல், வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்துதல். இரண்டாவது : ஒளியினால் படைக்கப்பட்டடுள்ள மலக்குகள் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்கள், அவர்கள் ஒரு போதும் அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டார்கள், அவனின் கட்டளைப்பிரகாரமே செயற்படுவர்கள் என்ற மலக்குமார்களை ஈமான் கொள்வது. மூன்றாவது : அல்லாஹ்வினால் இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களான அல் குர்ஆன் இன்ஜீல் தவ்ராத் போன்றவற்றை ஈமான் கொள்வது. நான்காவது : அல்லாஹ்விடமிருந்து அவ்வேதங்களையும் மார்க்கத்தையும் பெற்று அவற்றை எத்திவைத்த தூதுவர்களான நூஹ், இப்ராஹீம் மூஸா ஈஸா அலைஹிமுஸ்ஸலாம், இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகியோரையும் ஏனைய நபிமார்களையும் விசுவாசித்தல். ஐந்தாவது : மறுமை நாளை ஈமான் கொள்வது, இதில் மரணத்திற்கு பின்னுள்ள மண்ணறை மறை வாழ்வையும், மனிதன் மரணத்தின் பின் விசாரிக்கப்பட்டு ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வான் என்பதையும் இந்தப்பகுதி உள்ளடக்கியுள்ளது. ஆறாவது: அல்லாஹ் அவனின் முன்னறிவின் பிரகாரம் தீர்மானித்து விதித்த விதியை ஈமான் கொள்வது, இதில் அல்லாஹ் தான் முன்னறிவின் படி விதித்துள்ள விடயங்களையும், விதித்த அந்த விடயங்களில் ஆழ்ந்த நோக்கமுள்ளது என்பதையும், அது நிகழ்வதற்கு அவனின் நாட்டமும் தேவை என்பதையும், விதித்த விடயங்கள் யாவும் அவன் விதித்தபடி நடைபொறும் என்பதையும், இப்பிரபஞ்ஞத்தில் நிகழும் அனைத்து விடயங்களையும் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடத்தில் உள்ளது என்பதையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்தும் அவர் இஹ்ஸான் குறித்து கேட்டார் அதற்கு நபியவர்கள் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ காண்பது போல் வணங்குவீராக. ஆக இந்த (நிலையை) அந்தஸ்தை எய்துகொள்ள முடியவில்லை என்றால் அல்லாஹ்வை அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவீராக. இதில் முதலாவது நிலையானது நேரடியாகப் பார்த்தல் என்ற அந்தஸ்தையும் இரண்டாவது அவதானம் எனும் அந்தஸ்தையும் குறிக்கிறது.
பின்னர் அவர் மறுமை நாள் எப்போது நிகழும்? என வினவினார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாள் நிகழ்வது குறித்த அறிவை அல்லாஹ் மாத்திரமே பெற்றுள்ளான்.(தனதாக்கிக் கொண்டுள்ளான்) அவனின் படைப்புகளில் எவரும் அது குறித்து அறியமாட்டார்கள். கேள்விகேட்டவரும் கேட்கப் பட்டவரும் இதில் விதிவிலக்கானோர் அல்லர். அவர்களும் அதனை பற்றி அறியமாட்டார்கள் என தெளிவு படுத்தினார்கள்.
பின்னர் அவர் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்துக் கேட்டார். அதற்கு நபியவர்கள், அடிமைப் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் அதிகரித்தல், அல்லது பிள்ளைகள் தமது தாய்மார்களை அடிமைகளைப் போன்று நடத்துதல், ஆடு மேய்க்கக் கூடிய சாமான்ய வறியவர்களுக்கு இறுதிக் காலங்களில் வசதி ஏற்பட்டு மாடமாளிகைகளைக் கட்டுவதில் போட்டிபோட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளுதல் போன்றவை அதன் அடையாளங்களில் சில என நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவர் ஜிப்ரீல் என்றும் அவர் புனித இம்மார்க்கத்தை ஸஹாபாக்களுக்கு கற்றுத்தர வந்தார் எனவும் தெரிவித்தார்கள்.