/ 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'

'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோள் கூறித்திரிபவன் தண்டனைக்குரியவன் அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Hadeeth benefits

  1. கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  2. கோள் கூறுவதால் தனிநபர்கள் மற்றும் சமூகங்களிக்கிடையில் குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படுவதினால் கோள் சொல்லுதல் தடுக்கப்பட்டிருத்தல்.