- யாரிடம் தீய எண்ணங்கள் பற்றிய அறிகுறிகள் தென்படுகிறதோ அவரைப்பற்றித் தப்பான எண்ணம் கொள்வதில் பிரச்சினை கிடையாது. ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை விவேகமுள்ளவனாகவும், புத்திசாதுரியம் மிக்கவராகவும் இருப்பதோடு, பாவிகள் மற்றும் தீயவர்கள் விடயத்தில் ஏமாந்திடலாகாது.
- இங்கே பிறர்பற்றி பழிசுமத்துதல் தீய எண்ணங் கொள்வது என்பற்கான எச்சரிக்கையானது உள்ளத்தில் ஆழமாக நினைத்து அதில் விடாப் பிடியாக இருத்தலைக் குறிக்கும். மாறாக உள்ளத்தில் ஒருவரை ப்பற்றி சாதாரணமாக வந்து போகும் எண்ணங்களைக் குறிக்காது.
- முஸ்லிம் சமூகத்தில் உள்ள தனிநபர்களுக்கிடையி ல் உறவைத்துண்டாடி வெறுப்பை தூண்டுவதற்கு காரணமாக காணப்படுகின்ற மற்றவர் குறையை ஆராய்தல், பொறாமைப்படுதல் போன்ற விடயங்கள் ஹராமாக்கப்பட்டிருத்தல்.
- நலன் நாடுவதிலும் நேசம் கொள்வதிலும் ஒரு முஸ்லிமுடன் சகோதரத் தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்திருத்தல்.