- இலஞ்சத்தில் தவறுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலை உள்ளதால் அதனைக் கொடுத்தல், எடுத்தல், அதற்காக மத்தியஸ்தம் வகித்தல், துணைபோதல் அனைத்தும் ஹராமாகும்.
- இலஞ்சம் பெரும்பாவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நபியவர்கள் அதனை எடுப்பவர், கொடுப்பவர் இருவரையும் சபித்துள்ளார்கள்.
- அநியாயம் இழைத்தல், அல்லாஹ் இறக்காததை வைத்துத் தீர்ப்பு வழங்கல், போன்றன நீதித்துறையில் இலஞ்சப் பரிவர்த்தணையின் போது ஏற்படுவதால் அது பாரிய குற்றமாகவும், கடுமையான பாவமாகவும் உள்ளது.