- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகான கற்பித்தல் முறையை இங்கு அவதானிக்கலாம். கேள்வி - பதில் அமைப்பில் சில விடயங்களை விளக்குவதை காணமுடிகிறது.
- 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்ததன் மூலம், ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பேணிய நல்லொழுக்கத்தை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது.
- கேள்வி கேட்கப்பட்டவர் தனக்குத் தெரியாததை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் என்று கூறுவது சிறப்பாகும்.
- சமூக உறுப்பினர்களிக்கிடையில் சகோதரத்துவத்தையும், அவர்களின் உரிமைகளையும் இஸ்லாமிய மார்க்கம் பாதுகாத்தல்.
- பொதுவாக புறம் பேசுவது ஹராமாகும், ஆனால் நலன்களைக் கருத்திற்கொண்டு சில சந்தர்ப்பங்களில் பேசுவது அனுமதிக்கப் பட்டதாகும். அக்கிரமத்தை-அநியாயத்தை- தடுத்தல், அதில் ஒன்றாகும் . அதாவது ஒரு அக்கிரமத்திற்கு ஆளாக்கப்பட்டவர் தனது உரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அதிகாரம் படைத்த ஒருவரிடம் குறித்த நபரால் தனக்கேட்பட்ட அநியாயத்தை முறையிடுதல், அதாவது இன்னார் எனக்கு அநியாயம் இழைத்து விட்டார் அவர் எனக்கு இவ்வாரெல்லாம் செய்தார் என்று முறையிடுவதைக் குறிக்கும், மேலும் திருமண விவகாரத்தில் ஆலோசனை கேட்கும் விடயத்திலும், அல்லது கூட்டு முயற்சிகளில் ஈடுபடும் விடயத்திலும், அண்டி வாழும் விடயத்திலும் குறித்த நபர்கள் பற்றி விசாரிப்பதற்கு அனுமதியுள்ளது.