- இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாட்டில் உறவை பேணுதல் என்பது உம்மை உனது உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களை சேர்ந்து நடப்பதும், உமக்கு அநியாயம் இழைத்தாலும் அதனை மன்னித்து விடுவதும், உமக்கு எதையும் கொடுக்காது விட்டாலும் நீ அவர்களுக்கு கொடுத்துதவுவதையுமே குறிக்கிறது. மாறாக அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ அதே போன்று பதிலுக்கு பதில் நடந்து கொள்வதை குறிக்கமாட்டாது.
- உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது அவர்களுக்கு தம்மால் இயலுமான நன்மையான விடயங்களை செய்வதாகும். அவைகளில். உறவுகளுக்கு பண உதவிகள் வழங்குதல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல் நன்மை ஏவி தீமையைத் தடுத்தல் இது போன்ற விடயங்களுடன் அவர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து பாதுகாப்பதையும் குறிக்கும்.