- உறவு என்பது தந்தை மற்றும் தாய் வழி உறவுகளைக் குறிக்கும். உறவானது எவ்வளவு நெருக்கமானதாக உள்ளதோ அந்தளவில் அவர்களுடன் உறவைப்பேணி நடப்பதற்கு முன்னுரிமை பெறுவர்.
- செயலின் தன்மைக்கேட்பவே கூலி உண்டு, அந்த வகையில் யார் தனது உறவுகளுடன் அவர்களுக்கு உபகாரம் புரிவதன் மூலமும் நன்மை செய்வதன் மூலமும் உறவைப்பேணி நடக்கிறாரோ அவரின் ஆயுளையும் வாழ்வாதாரத்தையும் அல்லாஹ் நீடித்து வைக்கிறான்.
- குடும்ப உறவைப் பேணுதல் வாழ்வாதாரம் பெருகி,விசாலமாக்கப்படவும், ஆயுள் நீடிக்கவும் காரணமாக அமைகிறது. ஆயுளும் வாழ்வாதாரமும் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அதுவும் சிலவேளை ரிஸ்கிலும் ஆயுளிலும் கிடைத்த பரகத்தாக இருக்கலாம். அந்த ஆயுளில் ஏனையோரைவிட மிகவும் பயனுள்ள அதிகமான விடயங்களை அவர் செய்திருப்பார். வாழ்வாதாரமும் ஆயுளும் அதிகரித்தல் என்பது யதார்த்தமான அதிரிப்பையே குறிக்கிறது.