/ உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'

உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

தனது உறவுகளுடன் உறவை முறித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காது, அல்லது அவர்களுக்கு நோவினை செய்து, கெடுதி செய்பவர் சுவர்கத்தினுள் நுழையும் தகுதியை இழந்துவிட்டவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

Hadeeth benefits

  1. உறவைத் துண்டிப்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  2. உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது வழக்காறுகளைப் பொறுத்தே அமையும். இது கால இட மனிதர்களின் வித்தியாசத்திற்கேட்ப வேறுபடும்.
  3. உறவுகளை சேர்ந்து நடப்பதென்பது அவர்களை தரிசித்தல், தர்மம் வழங்குதல், அவர்களுக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளுடன், நோயாளியை சுகம் விசாரிக்கச் செல்லுதல், அவர்களுக்கு நன்மையான விடயங்களை ஏவுதல், தீமையான விடயங்களை தடுத்தல் போன்ற விடயங்களை குறிக்கிறது.
  4. உறவுகளை துண்டிப்பது, உறவுகளில் மிகவும் நெருங்கிய உறவுகளுடன் (உம் : தாய் தந்தை சகோதரர் சகோதரி) இருப்பின் அதற்குரிய பாவமும் கடுமையானதாக அமைந்து விடும்.