- ஒப்பந்தப் பிரஜை, திம்மி,(இஸ்லாமிய அரசினுள் வாழும் காபிர்) அடைக்கலம் தேடிவந்தவர் ஆகியோரை கொல்வது ஹராமாகும், அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
- முஆஹித் என்பவர் : காபிர்களில் முஸ்லிம் அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர், அவர் தனது நாட்டில் இருப்பார், அவர் முஸ்லிம்களுக்கு எதிராக போரிட மாட்டார் அவருக்குகெதிராக போர்த்தொடுக்கவும் கூடாது. திம்மி என்பவர் இஸ்லாமிய நாட்டில் வரி செலுத்தி வாழ்ந்துவருபவர், முஸ்தஃமன் என்பவர்; குறிப்பிட்ட காலத்திற்கு இஸ்லாமிய நாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்பவர்.
- முஸ்லிம் அல்லாதோருடன் செய்த உடன்படிக்கைக்கு துரோகம் செய்வது எச்சரிக்கப்பட்டிருத்தல்.