- மறுமையில் விசாரிக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் மிகப்பிரதானமான ஒன்று என்றவகையில் கொலைக்குற்றத்திற்கு முன்னுரிமை அளித்ததானது இதன் பாரதூரத்தன்மையை விளக்கப் போதுமான ஒன்றாகும்.
- பாவங்களின் கனதியானது, அதனால் ஏற்படும் விளைவைப் பொறுத்ததாகும். அந்த வகையில் அப்பாவித்தனமான உயிர்களை பறிப்பது மிகப்பெரும் கொடுமையாகும். இதனை விடவும் மிகவும் கொடுமை நிறைந்ததாக இறைநிராகரிப்பும், இணைவைப்பும் காணப்படுகின்றன.