- பொய் சத்தியத்தின் ஆபத்து மற்றும் குற்றத்தின் கடுமை காரணமாக அதற்கு கப்பாரா குற்றப் பரிகாரம் எதுவும் கிடையாது. மாறாக அதற்காக தவ்பாவே பரிகாரமாக அமையும்.
- இந்நபிமொழியில் இந்நான்குடன் மாத்திரம் சுருக்கிக் கொண்டிருப்பது பாவத்தால் இவை ஆபத்தானவை, என்பதற்காகவே தவிர இந்த நான்கு விடயங்கள் மாத்திரமதான் பெரும்பவங்கள் என்பது இதன் கருத்தல்ல என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். இதுவல்லாத பல பெரும்பாவங்கள் உண்டு.
- பாவங்களை பெரும்பாவங்கள், சிறுபாவங்கள் என இரண்டாக வகைப்படுத்திட முடியும், அதில் பெரும்பாவம் என்பது குறிப்பிட்ட செயலைச் செய்தால் சாபம் ஏற்படுதல், மற்றும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஷரீஆ நிர்ணயித்திருக்கும் உலகியல், தண்டனை கிடைத்தல், அல்லது நரகத்தினுள் நுழைதல் என்ற மறுமை எச்சரிக்கையை வலியுறுத்தும் அனைத்துப் பாவங்களையும் குறிக்கும். பெரும்பாவங்கள் பல படித்தரங்களைக் கொண்டது அவற்றில் சில சிலவற்றைவிடவும் மிகவும் கண்டனத்திற்குரிய கடுமையாக தடைசெய்யப்பட்டவையாக உள்ளன. பெரும்பவங்களைத் தவிர்ந்தவை அனைத்தும் சிறு பாவங்களாகும்.