- பாவங்களில் மிகக்கொடுமையானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும், ஏனெனில் நபியவர்கள் இதனைத் தான் பாவங்களின் தலையாததாகவும் மிகப் பெரியதாகவும் ஆக்கியுள்ளார்கள்.' அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான், அதுவல்லாததைத் தான் நாடியோருக்கு மன்னிக்கின்றான்' என்ற இறைவசனம் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
- பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் மகிமை இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை, ஏனெனில் அதனை அல்லாஹ் தனக்கு செய்ய வேண்டிய கடமையுடன் சேர்த்துக் கூறியுள்ளான்.
- பாவங்களை பெரும்பாவங்கள், சிறுபாவங்கள் என இரண்டாக வகைப்படுத்திடமுடியும்;. அதில் பெரும்பாவம் என்பது குறிப்பிட்ட செயலைச் செய்தால் சாபம் ஏற்படுதல், மற்றும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஷரீஆ நிர்ணயித்திருக்கும் உலகியல்; தண்டனை கிடைத்தல், அல்லது நரகத்தினுள் நுழைதல் என்ற மறுமை எச்சரிக்கையை வலியுறுத்தும் அனைத்துப் பாவங்களையும் குறிக்கும். பெரும்பாவங்கள் பல படித்தரங்களைக் கொண்டவ, அவற்றில் சில சிலவற்றைவிடவும் மிகவும் கண்டனத்திற்குரிய கடுமையாக தடைசெய்யப்பட்டவையாக உள்ளன. பெரும்பவங்களைத் தவிர்ந்தவை அனைத்தும் சிறு பாவங்களாகும்.