- பெரும்பாவங்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட ஏழு அம்சங்களில் மாத்திரம் வரையறுக்கப் பட்டதல்ல. மாறாக இவை தவிரவும் அதிகமான பெரும்பாவங்கள் உண்டு. ஆனால்,இங்கு குறிப்பிடப்பட்டவை மிகவும் ஆபத்தும், தீங்கும் நிறைந்தவை என்பதால் அவை விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைக் கருத்திற்கொள்க.
- ஒருவர் இன்னொருவரை அநியாயமாகக் கொன்றுவிட்டால் கொலைசெய்தவருக்கு பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றல், மதத்தை துறந்து செல்லல், திருமணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபடுதல் போன்ற நியாயமான காரணங்கள் காணப்படின் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதாகும். இதனை சட்டபூர்வ இஸ்லாமிய ஆட்சியாளரே நடைமுறைப் படுத்துவார்.